Vempady.com : Read and Share| News | Articles

இருதய அடைப்பை செலவில்லாமல் சரிசெய்யலாம்
உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நிச்சயம் நீங்கள் குணமடைவீர்கள்.தன் இருதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டொக்டர் ஒருவரை சந்தித்தார். தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டொக்டர் நோயாளிக்கு பரிந்துரைத்தார்.

மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவைசிகிச்சைக்கு முதல்நாள் ரூ. 2,25,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டொக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.

ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பின்னர் ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டொக்டர் வினவினார்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.

1 கப் எலுமிச்சை சாறு

1 கப் இஞ்சிச் சாறு

1 கப் புண்டு சாறு

1 கப் அப்பிள் சைடர் வினிகர் (2 ஸ்பூன் வினிகர் கலந்த 1 கப் அப்பிள் சாறு).

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாள்தோறும் காலை உணவுக்கு முன்னர் இந்த பானத்தை ஒரு டீ ஸ்புன் அருந்துங்கள். மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்….சுவையாகவும் இருக்கும்.

நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

20 ஆண்டைக் கடந்த மொசைக் பிரவுசர்
இன்றைக்கு இணையம், அதனைக் கொண்டு வந்து தரும் பிரவுசர் எல்லாம், நாம் எப்போதும் பயன்படுத்தும் கைக்குட்டை போல ஆகிவிட்டன. 20 ஆண்டுகளுக்கு முன்னால், “WEB” என்ப தெல்லாம் கம்ப்யூட்டர் தொழில் நுட்ப வல்லுநர்கள் மட்டுமே அறிந்த ஒன்றாக இருந்தது.

பின்னர், அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக் கழக வல்லுநர்கள் இணைந்து மொசைக் (Mosaic) என்னும் பிரவுசரை உருவாக்கி நமக்கு அளித்தனர்.

இதுதான் கிராபிகல் முறையில் நமக்குக் கிடைத்த முதல் பிரவுசர். இதன் பின்னரே, இதனைப் பின்பற்றி மற்ற பிரவுசர்கள் நமக்குக் கிடைத்தன. இப்போது நீங்கள் எந்த சாதனத்தையும் ஒரு நிமிடம் இயக்கினால் போதும். இணையத்தில் நீங்கள் இருப்பீர்கள்.

மொசைக் பிரவுசர் வருவதற்கு முன்னால், இணையம் உங்களுக்குக் கிடைக்க பெரும்பாலும் நீங்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருக்க வேண்டும். அப்போது கேரக்டர் அடிப்படையிலான இன்டர்பேஸ் புரோகிராம் மூலம் தான், நமக்கு இணையம் கிடைத்து வந்தது.

மொசைக் தொடங்கிய பிரவுசர் வரிசை, இன்று நன்றாக வளர்ந்து, பலத்த போட்டியுடன், நீயா? நானா? என்ற வகையில் கம்ப்யூட்டர் பயனாளர்களைப் பிடிக்க தொடர்ந்து மாற்றங்களை மேற்கொண்டு இயங்கி வருகின்றன. தொடக்க காலத்தில் வந்த பிரவுசர்களில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

மொசைக் பிரவுசரை உருவாக்கியவர்கள் மார்க் ஆண்ட்ரீசென் மற்றும் எர்க் பினா (Marc Andreessen and Eric Bina) ஆவார்கள். ஆனால், முதன் முதலில் உருவான பிரவுசர் Mosaic அல்ல. அதற்கு முன்னால், ஒரு பிரவுசர் யூனிக்ஸ் சிஸ்டங்களில் பயன்படுத்தப்பட்டது. விண்டோஸ் இயக்கத்தில் முதல் பிரவுசராக செல்லோ (Cello) வெளியானது. பின்னரே மொசைக் வெளியானது.

மொசைக் பிரவுசர் அவ்வளவு எளிய நடைமுறையைப் பெற்றிருக்கவில்லை. 1990 வரை இதனைப் பயன்படுத்துவது, ஏதோ மேஜிக் போல இருக்கும். அப்போதிருந்த விண்டோஸ் இயக்கமும், இன்டர்நெட் வழிமுறையான டி.சி.பி/ஐ.பி இயக்கத்தினை அவ்வளவாக சப்போர்ட் செய்திடவில்லை.

விண்டோஸ் 95 சிஸ்டம் தான், இணைய வழிமுறைக்கேற்ற பயன்படுத்துவதற்கு எளிய ஆப்பரேட்டிங் சிஸ்டமாக வெளியானது. இன்டர்நெட் பக்கம் மக்களின் விருப்பம் செல்வதனை அறிந்த, மொசைக் பிரவுசர் தயாரித்த இருவரும், இதன் வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்த திட்டமிட்டு, பிரவுசர் ஒன்றை உருவாக்கினார்கள்.

அப்போது கிடைத்ததுதான் Netscape. மைக்ரோசாப்ட் நிறுவனமும், மக்களின் இணைய ஆர்வத் தினைத் தாமதாமாகவே புரிந்து கொண்டது. மொசைக் குறியீடுகளைப் பயன்படுத்தி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் முதல் பதிப்பினை, ஆகஸ்ட் 1995 மாதம், விண்டோஸ் 95 சிஸ்டத்துடன் தந்தது. ஆனால், இன்றும் வெளியாகும் அனைத்து பிரவுசர்களிலும் மொசைக் பிரவுசரின் பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது.

ஏறத்தாழ பத்து ஆண்டுகள், 1991 வரை இன்டநெட் நமக்கு கேரக்டர் அடிப்படை யிலேயே கிடைத்து வந்தது. இன்றைய இன்டர்நெட் என்பது அப்போது கற்பனை யாகக் கூட மக்கள் அறிந்திருக்கவில்லை. 1993 வரை, தொழில் நுட்ப வல்லுநர்களான சிலரே இன்டர்நெட் பெற்று பயன்படுத்த முடிந்தது.

பின்னரே, வேர்ல்ட் வைட் வெப் World Wide Web (WEB) என அழைக்கப்படும் வெப் உலகம் நம்மை அழைத்தது. இதன் காரண கர்த்தா டிம் பெர்னர்ஸ் லீ. அவருக்கு நாம் வணக்கம் கூறுவோம்.

மஞ்சள் காமாலை உருவாகக் காரணம் மற்றும் தீர்வு
பொதுவாக மஞ்சள் காமாலை நோய் பித்தம் அதிகரிப்பதால் வருகிறது. பித்தமானது பல காரணங்களால் மிகுதியாகி ரத்தத்தில் கலந்து விடுவதால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது.

உடல் உஷ்ணத்தாலும், இரவில் கண்விழித்து வேலை பார்ப்பதாலும், தூக்கமின்மையாலும், வயிற்றில் புளிப்புத்தன்மை ஏற்பட்டு சளி பிடித்து, ரத்தம் சூடேறி, காமாலைக் கிருமிகள் உண்டாகி, மஞ்சள் காமாலை நோயைத் தோற்றுவிக்கிறது.

இந்த பித்தமானது நஞ்சு போல் உடலில் எங்கும் வியாபிக்கக்கூடிய தன்மையுள்ளது. அதோடு மட்டுமல்லாமல், நவீன உலகத்தில் உணவுப் பழக்கங்களாலும், மிதமிஞ்சிய உணவுகளாலும், பாமாயில் கலக்கப்பட்ட எண்ணெய்களாலும் ஒருதடவை சமைத்த உணவை குளிர்சாதன பெட்டியில் வைத்து தேவைப்படும் போது மாறி மாறி சூடுபண்ணி பல நாட்கள் சாப்பிடுவதாலும், உண்ட உணவானது உடலில் புளிப்புத் தன்மையை உண்டாக்கி செரியாமை ஏற்பட்டு குடலின் பித்தமானது சளியோடு கலந்து ரத்தத்தில் சேர்ந்துவிடுகிறது. இப்படிப்பட்ட உணவுப் பழக்கங்களால், மஞ்சள் காமாலை நோய்த் தொற்று ஏற்படுகிறது.

மேலும், தலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை மறந்ததாலும் நரம்புகள் சூடாகி பித்தம் அதிகரித்து மஞ்சள் காமாலை நோய் உண்டாகிறது. பித்தமானது அலர்ஜியாகும் போது காமாலை நோய்க்கிருமி தோன்றி, முதலில் கல்லீரலைப் பாதித்து, கண்களில் மஞ்சள் நிறம் தோற்றுவிக்கிறது. சிறுநீர் மஞ்சளாக வெளியேறுகிறது.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிறுநீர், மலம் கழித்த இடத்தை மற்றவர்கள் பயன்படுத்தினால் அவர்களையும் நோய்த் தொற்ற வாய்ப்புண்டு. ஆகையால், பாடசாலை முதல், கல்லூரி வரை ஏதேனும் ஒரு மாணவருக்கு மஞ்சள்காமாலை நோய் இருந்தால் அது மற்றவர்களுக்கு எளிதில் பரவி விடுகிறது.

பொதுவாக இப்படிப்பட்ட பித்த அலர்ஜியால் உண்டாகும் மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருத்துவத்தில் கீழாநெல்லி என்ற மூலிகையை அதிகம் பயன்படுத்துவார்கள்.

கீழாநெல்லி – ஒரு கைப்பிடி

சீரகம் – 1 ஸ்பூன்

இரண்டையும் நீர்விட்டு அரைத்து கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் கொடுத்து வந்தால் பித்தம் தணிந்து, காமாலை நோய்த்தொற்று கிருமிகள் அழியும்.

கீழாநெல்லி, சுக்கு, மிளகு, சீரகம், சோம்பு, மஞ்சள் இவற்றை சம அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து, சர்க்கரை கலந்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை அருந்தி வந்தால் மெல்ல மெல்ல முழுமையாக குணமடையும்.

கீழாநெல்லி, சீரகம், பூவரச பழுத்த இலை, கரிசலாங்கண்ணி (வயல் வெளியில் வெள்ளைப்பூக்கள் நிறைந்து காதில் அணியும் கம்மல் போன்று இருக்கும்) இவை அனைத்தும் 3 கிராம் அளவிற்கு எடுத்துக் கசாயம் செய்து காலை, மாலை வேளைகளில் சாப்பிடும் முன் அருந்தினால் காமாலை நோய் குணமாகும்.

காய்ச்சல், குளிர்சுரம் வந்தால், பித்தத்தை அதிகப்படுத்தும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. பித்தத்தைத் தணிக்க, காய்கள், கீரைகள், பழவகைகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். நாள்பட்ட உணவுகளை சூடாக்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மழைக்காலங்களில் நீரை கொதிக்க வைத்து ஆறிய பின் அருந்தவேண்டும். புளி, உப்பு, காரம் குறைத்து சாப்பிட வேண்டும். எண்ணெய்ப் பலகாரங்களையும், அதிக எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருள்களையும் தவிர்க்க வேண்டும். நன்கு ஓய்வு எடுக்க வேண்டும்.

தொலைக்காட்சி உருவான கதை – John Logie Baird
உலகில் எந்த மூலையிலும் ஒரு சம்பவம் நிகழும்போது அதனை அப்படியே நேரடியாக உடனடியாக நம் கண்களுக்கு கொண்டு வரும் சாதனம் தொலைக்காட்சி. தத்ரூபமாகவும் மிகைப்படுத்தாமலும் காட்டக்கூடிய மகிமையும் சிறப்பும் தொலைக்காட்சிக்கு உண்டு.

1922 ஆம் ஆண்டில் வானொலி உலகுக்கு கிடைத்தபோது ஒரு பெட்டியில் குரலைக் கேட்க முடியுமா?என்று அதிசயித்த உலகம் அடுத்த நான்கே ஆண்டுகளில் ஒரு பெட்டியில் குரலைக் கேட்பதோடு உருவங்களையும் பார்க்க முடியும் என்பதை கற்பனை செய்துகூட பார்த்திருக்காது. ஆனால் கற்பனை செய்பவர்கள்தானே கண்டுபிடிப்புகளையும் செய்கிறார்கள்.

ஒரு பெட்டிக்குள் ஒலியையும், ஒளியையும் காட்ட வேண்டும் என்று கற்பனை செய்து கனவு கண்டு தொலைக்காட்சி என்ற உன்னத சாதனத்தை உலகுக்குத் தந்த ஒருவரைத்தான் தெரிந்து கொள்ளவிருக்கிறோம். அவர் பெயர் John Logie Baird. வானொலியின் தந்தை Marconi என்றால் தொலைக்காட்சியின் தந்தை Baird.

1888 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் 13ந்தேதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகருக்கு அருகில் ஹெலன்ஸ்பர்க் என்ற இடத்தில் பிறந்தார் ஜான் லோகி பேர்ட். நான்கு பிள்ளைகளில் அவர்தான் கடைக்குட்டி. அவரது தந்தை ஒரு பாதிரியார் குறைந்த வருமானத்தில் பெரிய குடும்பத்தை நிர்வகித்து வந்தார். பேர்ட் சிறுவயது முதலே ஆரோக்கியம் குன்றியிருந்தார். அதனாலோ என்னவோ அவருக்கு விளையாட்டு, பொழுதுபோக்கு போன்றவற்றில் அதிக நாட்டம் இல்லை.

வீட்டுக்கு அருகில் இருந்த தொடக்கப்பள்ளியில் ஆரம்பக்கல்வியைக் கற்றார் பேர்ட். பேர்ட்க்கு சிறுவயதிலிருந்தே புகைப்படங்களின் மீது அதிக ஆர்வம் இருந்தது. அந்தக்காலக் கட்டத்தில் இங்கிலாந்து பள்ளிகளில் பல இணைப்பாடங்கள் கற்பிக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று புகைப்படக்கலை பேர்ட் அதில் அதிக ஆர்வம் காட்டி புகைப்படக்கலை சங்கத்தின் மாணவர் தலைவராகவும் செயல்பட்டார். அறிவுக்கூர்மையும் கைகொடுக்க பேர்ட் தனது பணிரெண்டாவது வயதிலேயே சில நண்பர்களுடன் சேர்ந்து படங்கள் காட்சிகள் பற்றியும், நகரும் காட்சிகள் பற்றியும் சோதனைகளை செய்தார்.

17 ஆம் வயதில் லண்டன் ராயல் தொழில்நுட்பக் கழகத்தில் மின்பொருளியல் துறையில் சேர்ந்து முதல் நிலையில் தேறினார். பின்னர் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோதே செலினியம் செல்களைக் கொண்டு ஒளியை மின் சமிக்ஞைகளாக மாற்ற முடியும் என்று நம்பிய பேர்ட் பல்கலைக் கழகத்தில் அதற்கான ஆய்வுகள் செய்ய முடியாததால் வீட்டிலேயே ஆய்வுகளை மேற்கொண்டார்.

மின்சாரம் மூலம் ஒளியையும் பேசும் படத்தையும்கூட அனுப்ப முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் எப்போதுமே இருந்தது. பட்டம் பெற்ற பிறகு ஒரு நிறுவனத்தில் உதவிப் பொறியாளராக வேலைக்குச் சேர்ந்தார். 26 ஆவது வயதில் மின்னணுத்தொழிற்சாலை ஒன்றில் பணி கிடைத்தது.

அவற்றிலெல்லாம் மன நிறைவடையாத பேர்ட் முற்றிலும் மாறாக காலுறை உற்பத்தி செய்யும் சொந்தத் தொழில் ஒன்றை தொடங்கினார். ஆனால் அதில் அவ்வளவு இலாபம் கிட்டவில்லை பின்னர் ரொட்டியில் தடவும் ஜாம் மற்றும் ச்சாஸ் தயாரிப்பில் இறங்கினார். உடல் ஆரோக்கியம் குன்றியதால் அந்தத் தொழிலையும் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்தச் சமயத்தில் ட்ரினிடேடில் இருக்கும் தன் நண்பரை பார்க்க கப்பல் பயணம் மேற்கொண்டார் பேர்ட். அப்போது கப்பலில் வானொலி இயக்கும் ஊழியரிடம் அவருக்கு நட்பு ஏற்பட்டது. வானொலி ஒலியை ஒலிபரப்புவதுபோல் படங்களை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வாறு ஒலிபரப்பலாம் என்பதுபற்றி இருவரும் நிறைய விவாதித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

1922 ஆம் ஆண்டில் தனது 34 ஆவது வயதில் லண்டன் திரும்பினார் பேர்ட். வேலையில்லாத காரணத்தால் அவர் வறுமையில் வாடினாலும் தொலைக்காட்சிப் பற்றிய கனவு மட்டும் அவரைவிட்டு நீங்கவில்லை. தொலைக்காட்சிப் பெட்டியின் செயல் முறைக்கான வரைப் படத்தை உருவாக்கி அட்டைப்பெட்டி, மின்மோட்டார், புரொஜ்க்ஸன் விளக்கு, மின் கலங்கள், நியான் விளக்கு, வானொலி வால்வுகள் போன்றவற்றை வைத்து பல வகையான ஆராய்ச்சிகளை செய்து பார்த்தார்.

இரண்டு ஆண்டுகள் அவர் உழைத்த உழைப்புக்கு 1924 ஆண்டு பலன் கிட்டுவதுபோல் தெரிந்தது. ஒரு சிலுவையின் நிழலை பத்து மீட்டர் தூரத்திற்கு அவரால் ஒலிபரப்ப முடிந்தது. மேற்கொண்டு ஆய்வைத் தொடர அவருக்கு பொருளாதார வசதி இல்லை உண்மையில் தனது ஆய்வுக்கருவிகளின் பாகங்களை விற்று சாப்பிடும் நிலைக்குக்கூடத் தள்ளப்பட்டார் அப்படியிருந்தும் மனம் தளரவில்லை பேர்ட்.

எப்படியாவது மனித முகத்தையும், நகரும் காட்சியையும் ஒரு பெட்டிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று முயன்றுகொண்டே இருந்தார். ஆராய்ட்சிக்கு பணமில்லாததால் உதவிகேட்டு செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தார். அதில் கிடைத்த உதவியைக் கொண்டு அடுத்த ஆண்டே தொலைக்காட்சியின் ஆரம்ப மாதிரியை இயக்கிப் பார்த்தார். எந்தக் குறையுமின்றி முழுப்படமும் திரையில் துல்லியமாகத் தெரிந்தது பேர்ட் மலைத்துப்போனார்.

அந்த நாள்தான் அதாவது 1925 ஆம் ஆண்டு அக்டோபர் 2ந்தேதிதான் உலகுக்கு தொலைக்காட்சி கிடைத்த நாள். அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் வண்ணத் தொலைக்காட்சிப் பற்றியும் ஆய்வு செய்து அதனையும் வெற்றிகரமாக உருவாக்கினார். 1929ல் பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகத்திற்காக கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சி சேவையைத் தொடங்கினார். இன்று தொலைக்காட்சி இல்லாத ஒரு உலகை நினைத்துப் பார்ப்பது சற்று சிரமம்தான்.

ஆனால் 85 ஆண்டுகளுக்கு முன்புவரை அது ஒரு கற்பனையாகவே இருந்தது. ஜான் லோகி பேர்ட் முயன்றதால் அந்தக் கற்பனை நிஜமானது. நமது வரவேற்பறைக்குள் உலகத்தைக் கொண்டு வர உதவிய அந்த முன்னோடி 1946 ஆம் ஆண்டு ஜூன் 14ந்தேதி தமது 58 ஆவது வயதில் காலமானார். ஜான் லோகி பேர்ட் 12 ஆவது வயதிலேயே தொலைக்காட்சிப் பற்றிய பல்வேறு சோதனைகளை செய்து பார்த்தார் என்று கட்டுரையின் தொடக்கத்தில் பார்த்தோம்.

இதே வயதில் உங்கள் பிள்ளைகளும் சிறுவயதிலேயே எதாவது சோதனைகளை செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்களா!! அவர்களைத் தட்டிகொடுத்து ஊக்கப்படுத்துங்கள். அவர்களைப் போன்றொர்களுக்குதான் வரலாறும் இடம்தர காத்திருக்கிறது

தாலி கட்டுவது ஏன்?
தாலி என்பது மணமகன்,மணமகள் கழுத்தில் கட்டும் மஞ்சள் கயிறு ஆகும். மஞ்சள் நிறம் இந்துக்களின் புனித நிறம் ஆகும். மேலும் தாலி என்பது ஒரு பெண்ணுக்கு அடையாள சின்னமாகும்.

தலைநிமிர்ந்து நடந்து வரும் ஆடவர்,ஒரு பெண்ணை பார்க்கும்பொழுது, கழுத்தில் தாலியை பார்க்கும் பொழுது இவள் மற்றவருக்கு உரியவள் என ஒதுங்கி போய்விடுவார்.

தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள்.

பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர்.

பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான்.

(இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர்.

விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள். தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.

இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாலியினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக சாஸ்திரம் கூறுகிறது.

தாலி என்பது ஆரியர்களுக்கு பிறகு வந்த பழக்கம் என சிலர் கூறுவர்.ஆனால் அது தவறாகும்.பண்டைய காலத்திலேயிருந்து தமிழர்கள் பின்பற்றிவந்த ஒரு சம்பிரதாயமாகும்.பண்டைய இலக்கியங்களில் இதை மங்கள நாண் என்று கூறப்பட்டுள்ளது.

மாங்கல்ய சரடானது ஒன்பது இழைகளை கொண்டதாகும்.ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குனங்களை குறிக்கிறது.

தெய்வீககுணம், தூய்மையானகுணம், மேன்மை,தொண்டுள்ளம், தன்னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்துகொள்ளுதல் போன்ற போன்பது குணங்களும் ஒரு ப்[எண்ணிற்கு இருக்கவேண்டும் என்பதற்காகவே,ஒன்பது சரடு உள்ள மாங்கல்ய நாண் பெண்களுக்கு அணியபடுகிறது.

வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள்
உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள்.

நிச்சயமாகப் போகும்.ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப்பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?

இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரைசீனி ஒரு ஊடுபொருளாகநமக்குள் செல்கிறது.

பதார்த்தத்தில்தான்என்றில்லை, சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம். இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.

குறிப்பாக, வெள்ளைச்சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படு கின்றன என்று பாப்போம்.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறா ர்கள்.

2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்துசூடுபடுத்தப்படு கிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட்அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படு கிறது.

3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சை டு வாயு செலுத்துகிறார்க ள்.

4. 102 சென்டிகிரேட்கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிற து.

5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகி றது.

7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும்சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது .

8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே. தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது . காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.

ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால்உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

மனிதனின் ஆயுளை அதிகரிக்கும் ஆயுர்வேத தெரபி
வேதம் இந்தியாவில் தோன்றிய சிறந்த மருத்துவ முறைகளில் இதுவும் ஒன்று. பல்வேறு நோய்களுக்கு இந்த மருத்துவமுறையில் ‘ஆயுர்வேத தெரபி’ என்ற சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அப்யங்கம்

மனித உடலுக்குள் முக்கியமான பல உறுப்புகள் இருக்கின்றன. அதில் ஏற்படும் வலிகளைப்போக்க கொடுக்கப்படும் மருத்துவ சிகிச்சை இது. நமது உடலில் 108 வர்ம புள்ளிகள் உள்ளன. அவைகளை பயன்படுத்தி உடலில் எந்த பகுதியில் வலி இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கிறார்கள்.

அந்த இடத்தில் பலா அஷ்வகந்தம், ஷரபலா தைலம், தான்வந்தரத் தைலம் போன்ற விதவிதமான தைலங்களை பயன்படுத்தி இந்த அப்யங்க சிகிச்சை அளிக்கப்படுகிறது. கால்வலி, கை வலி, குடைச்சல், முது குவலி போன்ற வலிகள் இதன் மூலம் நீங்கும். இந்த சிகிச்சை, வலியை நீக்குவதோடு உடலுக்கு வலுவையும் சேர்க்கும். அதனால் அப்யங்கம், ‘டூ இன் ஒன்’ சிறப்பை பெறுகிறது.

ஸ்வேதம்

உடலில் அடியோ, வலியோ ஏற்பட்டால் முன்பெல்லாம் வீடுகளில் பாட்டிகள் ஒத்தடம் கொடுப்பார்களே, அந்த அடிப்படையிலான சிகிச்சைதான் இது. உடலில் சூடான ஒத்தடம் கொடுப்பதன் மூலம் வியர்வை வெளியேற்றப்பட்டு நோய் குணப்படுத்தப்படுகிறது. இந்த ஒத்தடம் கொடுப்பதன் மூலம் தோலில் உள்ள கொழுப்பு குறைக்கப்படும்.

மருத்துவ குணம்கொண்ட மூலிகை இலைகளைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதிலிருந்து வெளிப்படும் ஆவியை பயன்படுத்தி 10 முதல் 20 நிமிடங்கள் வரை உடல் முழுவதும் ஒத்தடம் கொடுப்பார்கள்.

ஆமணக்கு, மணல், கோதுமை, உப்பு, ஆகியவற்றைப் பயன்படுத்தி உடலில் எண்ணெய்த் தன்மையை அதிகரிக்கச் செய்து, அவற்றை வியர்வை மூலம் வெளியேற்றுவார்கள். இந்த ஒத்தடத்தின் மூலம் மூட்டுவலி நீங்கும். சருமத்திற்கு அதிக பொலிவு கிடைக்கும். உடலுக்கும்-மனதிற்கும் உற்சாகம் பொங்கும். புத்துணர்ச்சிக்கான சிகிச்சை இது.

சிரோதாரா

இது ஒரு கலைநயமிக்க சிகிச்சை. நோயா ளியை மல்லாக்கப்படுக்கவைத்திருப்பார்கள். குறிப்பிட்ட உயரத்தில் மேலே கட்டப்பட்டிருக்கும் பாத்திரத்தில் மூலிகை மற்றும் மருந்துகள் கொண்ட தைலத்தை நோய்த் தன்மைக்கு தக்கபடி தயாரித்து நிரப்பிவைத்திருப்பார்கள்.

அதை நோயாளியின் முன் நெற்றிப்பகுதியில் பொழியச் செய்வார்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு தொடர்ச்சியாக அதை செய்வார்கள். இந்த மூலிகை எண்ணெய் தலையில் இருக்கும் மர்மப் புள்ளியில் படுவதால் உடல் முழுவதும் பரவி புத்துணர்ச்சி கிடைக்கும். மன அமைதியையும் கொடுக்கும். மருத்துவரின் ஆலோசனைப்படி இதை தொடர்ந்து செய்துவந்தால் உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், தூக்கமின்மை, கோபம், அமைதியின்மை போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

சிலர் வாழ்க்கையில் எதற்கெடுத்தாலும் பயப்படுவார்கள். சின்னச் சின்ன பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் பதட்டப்படுவார்கள். அவர்கள் மனம் எதிலும் நிலையாக இல்லாமல் அலைபாய்ந்து கொண்டிருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த தெரபி உதவும். தெரபியை பெறுகிறவர்கள் பயம், பதட்டத்தில் இருந்து விடுபட்டு ஆழ்ந்த தூக்கத்திற்கு சொந்தக்காரர்கள் ஆவார்கள்.

தக்ர தாரா

மோர் எல்லோரும் அருந்தக்கூடிய சிறந்த பானம். பருகுவதன் மூலம் உடலுக்குள் செல்லும் இந்த பானத்தை, உடலுக்கு வெளியே கொடுத்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவது இந்த தெரபியின் அடிப்படை. தக்ர என்பதற்கு மோர் என்ற பொருள் உண்டு. மூலிகை கஷாயத்தில் மோரினை கலந்து, அதை மண்பானையில் வைத்து புளிக்கவைப்பார்கள்.

பின்பு தினசரி சிகிச்சைக்கு தேவையான அளவு அந்த கஷாயத்தை எடுத்துபயன்படுத்துவார்கள். மீதி இருந்தால் அவற்றில் தண்ணீர் கலந்து வைப்பார்கள். இந்தக் கலவையில் மேலும் சிலவகை மூலிகைகளை கலந்து உடல் முழுவதும் பூசுவார்கள். தோல் நோய்களுக்கு இதன் மூலம் நிவாரணம் கிடைக்கிறது.

பஞ்ச அம்ல தாரா

எலும்புகள் தேய்ந்து சிதைவது இப்போது பெரும் நோயாக மாறிக்கொண்டிருக்கிறது. பெண்கள் மனோபாஸ் காலத்திற்கு பின்பு இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இடுப்பு எலும்பு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு பலவகையான மூலிகை எண்ணெய்களை பயன்படுத்தி இந்த தெரபியை வழங்குகிறார்கள். இதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகி எலும்புகள் பலமடைகின்றன.

தைல தாரா

இப்போது ஆண்களும், பெண்களும் அதிக அளவில் பயணங்கள் மேற்கொள்கிறார்கள். அதனால் தசை இறுக்கம் ஏற்பட்டு தாங்க முடியாத வலியால் அவஸ்தைப்படுகிறார்கள். விசேஷமாக தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட வகை மூலிகை எண்ணெய்களை கொண்டு தைல தாரா மசாஜ் செய்வார்கள். அதன் மூலம் வலிகள் தீர்ந்து உடல் உற்சாகம் பெறுகிறது.

கரீவ தாரா

தலைவலி, தலைசுற்று, முதுகுவலி, முதுகுதண்டுவட பாதிப்பு, கடுமையான உடல்வலி போன்றவைகளால் பாதிக்கப்படுகிறவர்களுக்குரிய தெரபி இது. இதில் மூலிகை எண்ணெய் வகைகளும், தோல் நீக்காத உளுந்தும் முக்கிய மருந்துகளாக பயன்படுகிறது. நோயாளியை குப்புறபடுக்கவைப்பார்கள்.

மூலிகைகளுடன் தோல் நீக்கப்படாத உளுந்தை சேர்த்து அரைத்து மாவுபோல் ஆக்குவார்கள். அதை பின் கழுத்துப் பகுதியில் ஒரு சிறிய தலையணை போல் வட்டமாக அமைப்பார்கள். குழி வடிவத்தில் உருவாக்கப்படும் அதில் மூலிகை எண்ணெய்யை ஊற்றுவார்கள்.

இந்த சிகிச்சையை தொடர்ந்து இரண்டு வாரங்கள் வரை நோய்த்தன்மைக்கு தகுந்தபடி தொடர்வார்கள். படுத்தால் எழுந்திருக்க முடியாமலும், எழுந்தால்படுக்க முடியாமலும் அவதிப்படுகிறவர்களுக்கு இந்த தாரா அதிக பலன் தரும்.

பிருஷ்ட வஸ்தி

கம்ப்யூட்டரில் வேலை செய்யும் ஆண்களும், பெண்களும் அடிக்கடி கழுத்து வலி-அதோடு இணைந்த முதுகு வலியால் அவதிப்படுவார்கள். நீண்ட தூர இருசக்கர வாகன பயணம் மேற்கொள்கிறவர்களும் இந்த தொல்லைக்கு உள்ளாகிறார்கள்.

உட்கார்ந்த இடத்திலே வெகு நேரம் அமர்ந்து வேலை பார்க்கும் பலருக்கும் இந்த வலி தொந்தரவு உண்டு. அவர்களுக்கு பலனுள்ள சிகிச்சை, பிருஷ்ட வஸ்தியாகும். இந்த சிகிச்சைக்கு தான்வந்தரத் தைலம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

இதில் பெரும்பாலும் மசாஜ் சிகிச்சையே கையாளப்படும். இந்த வகை மசாஜ் மூலம் உடலில் தசைகள் நெகிழ்ந்து, வலிகள் குறைந்துவிடும். ரத்த ஓட்டமும் சீராகும். இதனால் தசைகளில் உள்ள இறுக்கம் நீங்கி உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

ஜானு தாரா

இது முழங்கால் மூட்டின் மேல் செய்யப்படும் சிகிச்சை. மூட்டு ஜவ்வு தேய்மானத்தை சரி செய்யும்.

பரிமர்ஜனம்

மருத்துவ குணங்கள் கொண்ட ஏராளமான மூலி கைகள் இதில் பயன்படுத்தப்படுகின்றன. உடலின் தன்மைக்கு தக்கபடி சில வகை மூலிகைகளை தேர்ந்தெடுத்து, தூளாக்கி, காய்ச்சி அதனை ஒரு சிறிய பந்து போன்று உருவாக்குவார்கள். பின்பு அதனை மூலிகை கஷாயத்தில் ஊறவைப்பார்கள்.

நன்றாக ஊறிய பின்பு அதனை எடுத்து உடலில் குறிப்பிட்ட பாகங்களில் வைத்து மசாஜ் செய்வார்கள். இதனை தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் வரை செய்யவேண்டியதிருக்கும். இதனால் உடல் பருமனை கட்டுப்படுத்த முடியும். தொப்பையையும், தொடையின் பின்புற தசையையும் குறைக்கலாம். பெண்களுக்கு பிரசவத்திற்குப் பிறகு வயிறு தளர்ந்துபோதல் மற்றும் உடலில் சேரும் கொழுப்பை கரைக்கவும் இது உதவுகிறது.

காயகல்ப தெரபி

இளமையை நிலைநிறுத்தும் சிகிச்சை இது. இளமையை தொடர வேண்டும் என்றால் முதுமையை விரட்டவேண்டும். நோயின்றி வாழவேண்டும். அதற்காக அதிக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவேண்டும். அதனை இந்த தெரபி தருகிறது.

தேவையான அளவுக்கு ஆயுர்வேத மூலிகைகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த சிகிச்சையை பெறுகிறவர்கள் உணவுக் கட்டுப்பாட்டையும் மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலானவர்கள் ஐம்பது வயதில் இந்த தெரபியை செய்துகொள்கிறார்கள்.

மூக்கின் அழகை மறைக்கும் தழும்பை போக்க டிப்ஸ்…
தற்போது கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. தொடர்ச்சியாக கண்ணாடியை அணிபவர்களுக்கு, மூக்கின் மேல் தழும்புகள் போன்று கருப்பாக காணப்படும்.

இத்தகைய தழும்புகள் ஏற்படுவதற்கு காரணம் கனமான கண்ணாடி மற்றும் மூக்கினை அழுத்தும் படியாக நீண்ட நேரம் கண்ணாடி அணிவது தான்.

இது முகத்தில் ஒருவிதமான அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும். கண்ணாடி அணிவதால் ஏற்படும் தழும்புகளை போக்குவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

1. தினமும் முகத்தை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவி, மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இவ்வாறு தினமும் 3 முறை செய்து வந்தால், அத்தகைய கருப்பான தழும்புகளை படிப்படியாக மறைவதை காணலாம்.

2. உருளைக்கிழங்கை தழும்புள்ள இடத்தில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்து வந்தால், கண்ணாடியால் ஏற்படும் தழும்புகளை மறையும்.இவ்வாறு வாரம் 4 நாட்கள் செய்ய வேண்டும்.

3. எலுமிச்சை சாறும் கருமையான தழும்புகளை போக்க வல்லது. எலுமிச்சை சாற்றினை பஞ்சில் நனைத்து, தழும்புகள் உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

அதன் பின்னர் மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கருமை நிறம் மறையும்.

4. கற்றாழை ஜெல்லும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை போக்குவதற்கு சிறந்த பொருள். ஏனெனில் அதிலும் கிளின்சிங் தன்மை அதிகம் உள்ளது.

ஆகவே இதுவும் தழும்புகள் மற்றும் வடுக்களை போக்குவதற்கு வல்லது.

அகத்திக்கீரையின் அருமை
தாவரங்களில் கீரை வகைகள் மிகவும் சத்து மிக்கவை என்பது நாம் அறிந்ததே. அதிலும் அகத்திக்கீரை அதிக சத்துக்களையும், வைட்டமின்களையும் தன்னகத்தேகொண்டிருக்கிறது. சுவையான இக்கீரை, நம் நாடெங்கும், குறிப்பாகத் தமிழகத்தில் பயிரிடப்படுகிறது.

வெற்றிலைக் கொடிக்காலில் பற்றுத் தாவரமாகவும் இக்கீரையைப் பயிரிடுகிறார்கள். மலேசியாவில் பிறந்தது அகத்திக்கீரையின் தாயகம் மலேசியா ஆகும்.

இது 10 மீட்டர் உயரம் வரை வளரும். மென்மையான கட்டை வகை செடியாகும். அகத்தியில் பல்வேறு வகைகள் உள்ளன. சிவப்பு மற்றும் வெள்ளை நிறப்பூக்கள் கொண்டது.

இலைகள் இரட்டைச் சிறகமைப்புக் கொண்ட கூட்டிலைகளாகும். வெள்ளைப் பூக்களைக் கொண்டது அகத்தி என்றும், சிவப்புப் பூக்களைக் கொண்டது செவ்வகத்தி என்றும் அழைக்கப்படுகின்றன.

அடங்கியுள்ள சத்துக்கள்

ஈரப்பதம்-73 சதவீதம், புரதச்சத்து-83 சதவீதம், தாது உப்புகள்-3.1 சதவீதம், நார்ச் சத்து-2.2 சதவீதம், மாவுச்சத்து-12 சதவீதம், கொழுப்புச் சத்து-1.4 சதவீதம் என்ற அளவில் சத்துக்கள் உள்ளன.

தாது உப்புகளில் சுண்ணாம்புச் சத்து,பாஸ்பரஸ், இரும்புச் சத்து, பொட்டாசியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. வைட்டமின் ஏ, தயாமின், நிபோ பிளேவின், நிக்கோடினிக் அமிலம், வைட்டமின்-சி போன்றவையும் அடங்கியுள்ளன. மேலும் அகத்தி மரப்பட்டையில் டானின், பிசின் உள்ளது.

குணம்

அகத்திக்கீரை பொதுவாக நஞ்சை நீக்கும் குணமுள்ளதால், மருந்துண்ணும்  காலங்களில் இதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

பயன்படுத்தும் விதம்

அகத்திக் கீரையை வதக்கி உண்ணலாம். குழம்பில் இட்டும் சாப்பிடலாம். பூக்களையும் வறுத்து உண்ணலாம். பூக்களை கசாயமாக்கியும் அருந்தலாம். இலைச்சாறை தேனில் கலந்து அருந்தலாம்.

அகத்தியின் மருத்துவப் பயன்கள்

அகத்திப் பூவை சமைத்துச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். அகத்தி இலைச் சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த, ஒரு மாதத்தில் இருமல், இரைப்பு மாறும். இலைச்சாறை மூக்கில் உறிஞ்சினால் தலைநீர் இறங்கும்.

அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி சாறோடு அதே அளவு தேன் கலந்து அருந்தினால் வயிற்று வலி நீங்கும். இலைகளை அரைத்து அடிபட்ட புண்கள் மேல் கட்டிவந்தால் புண்கள் ஆறும்.

அகத்திக்கீரைப் பொடியை நீர் அல்லது பாலில் கலந்து குடித்துவந்தால் நாள்பட்ட வயிற்று வலி மாறும். அகத்திக்கீரை பால் சுரப்பைக் கூட்டும். இக்கீரையை உணவில் சேர்த்துவந்தால் மலச்சிக்கல் தீரும். அகத்திப் பூக்களைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசினால், தலைவலி மாறும்.

அகத்திப் பூ சாறு ஒரு கரண்டி எடுத்து, அதோடு ஒரு கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் இருமல், சளி தீரும். அகத்திக்கீரை பித்தநோயை நீக்கக்கூடியது என்பதோடு, உடல் சூட்டைத் தணிக்கக்கூடியது.

பூசைக்குரிய புனிதமான மலர்கள்
இறைவன் பூமியின் மீது படைத்துள்ள அத்தனை பொருட்களும் அவனுக்கு உரியவை. அதில் மலர்களும் அடங்கும். ஆயினும் எல்லா மலர்களும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் கிடைப்பது அரிது.

ஆகையால் கிடைக்கும் மலர்களையும், அதன் தன்மையையும், பயனையும் உணர்ந்து மனநிறைவோடு மனப்பூர்வமாகப் பயன்படுத்தி பூஜை செய்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

செந்தாமரை மலர் – செல்வம், தொழில் மேன்மை ஆத்ம பலம் தரும். வெண்தாமரை மலர், வெள்ளை நந்தியாவட்டை, மல்லிகை இருவாட்சி போன்ற வெள்ளை மலர்கள் மனக் குறையைப் போக்கும். மனதில் தைரியம் சேர்க்கும்.

அரளிமலர் – பெண்களுக்கு மாங்கல்ய பிராப்தி உண்டாக்கும். கடன் ஏற்படாமல் தடுக்கும்.

சிவப்பு அரளி, செம்பருத்தி – பெண்களுக்கு, மனதை வாட்டும் கவலை அகற்றி குடும்ப ஒற்றுமையை உருவாக்கும்.

நீலசங்கு புஷ்பம், நீலாம்பரம் ஆகியவை அவப்பெயரைப் போக்கும். தரித்திரம் நீக்கும். மனஅமைதி தரும். சனிபகவான் அருளைப் பெறவும் வழிவகுக்கும்.

மனோரஞ்சிதம் – குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்தி கணவன், மனைவிக்குள் அன்பை பெருக்கும்.

பாரிஜாதம் – அல்லிப்பூ போன்ற சற்று மங்கலான வெள்ளை புஷ்பங்களையும் இறைவனுக்கு சார்த்தக் கூடாது.

விநாயகர் பெருமானுக்கு எருக்கம்பூ, தும்பை, செம்பருத்தி, தாமரை, ரோஜா ஆகிய மலர்கள் பூஜைக்கு உகந்தவை.

முருகப் பெருமானுக்கு முல்லை, சம்பங்கி, ரோஜா, செங்காந்தள் போன்றவை உகந்தவை. திருமாலுக்கு தாமரை, பவளமல்லி, துளசி, சாமந்தி, ஆகியவை உகந்தவையாகும்.

லட்சுமிக்குத் தாழம்பூ மிகவும் சிறந்தது.

பொதுவாக பூவிற்கும், பொட்டிற்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மலர்கள் இல்லாத மங்கல நிகழ்ச்சிகளே கிடையாது. பூசைக்குரிய மலர்களைக் கொண்டு வழிபட்டால் பொருளும் பெருகும். புகழும் கூடும்.